டிஎன்பிஎஸ்சி முறைகேடு விசாரணை.. பாட்டிக்கு திதி கொடுக்க வந்தோம் அப்படியே தேர்வு எழுதினோம்… அதிகாரியை மிரள வைத்த தேர்வர்களின் பதில்கள்..

Published by
Kaliraj
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு விவகாரம்.
  • நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் – 4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள  5,575 மையங்களில் சுமார் 16,29,865 போட்டியாளர்கள்  தேர்வு எழுதினர்.இந்த தேர்வில்  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு  நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது.

 

Image result for tnpscந்த தேர்வு முடிவுகளில் முதல் நூறு இடங்களில் நாற்பது இடங்கள் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், கீழக்கரை தேர்வுமையங்களை சேர்ந்த நாற்பது பேர் தேர்ச்சி அடைந்தது தமிழகம் முழுவதும் இந்த தேர்வில் முறைகேடு நிகழ்ந்துள்ளடு என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதில் தேர்ச்சியடைந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இதில் அதிகமானவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் தற்போது  வெளியாகியுள்ளது. இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகப் பிற தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.இந்த தேர்வர்களின்  புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் தேர்வு எழுதிய பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை நேரடியாக அழைத்து விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முடிவெடுத்தது.

அதன்படி கடந்த 13-ம் தேதி திங்கள் கிழமை காலை தொடங்கிய விசாரணை மறுநாள் வரை நீடித்தது. இந்த விசாரணையில், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏன்?, ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியுள்ளனர் என்றும்.  எந்த சம்பந்தமும்  இல்லாமல் எதற்காக அந்தத் தேர்வு மையத்தைத் நீங்கள்  தேர்ந்தெடுத்தீர்கள்?’ என அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்களில் அதிகபேர் எங்கள் பாட்டிக்குத் திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் செல்ல வேண்டியிருந்தது.

 

அதனால் அங்கேயே தேர்வு எழுதிவிட்டு அப்படியே போய் திதி கொடுத்துவிட்டு வந்தோம் எனப் பதில் அளித்துள்ளனர். இந்நிலையில், இந்த நாற்பது  தேர்வர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின்  செயலர், தேர்வுக் கட்டுப்பட்டு அலுவலர் ஆகியோர் தலைமையில் நாளை ஒரு ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது என்றும், அந்த ஆலோசனை கூட்டத்தின்  முடிவில் இது  குறித்தும்  சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Published by
Kaliraj

Recent Posts

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

29 minutes ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

1 hour ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

4 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

4 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

5 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

5 hours ago