இன்னும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மழை இருக்கு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இன்னும் அடுத்த 24 மணிநேரத்திற்கு, கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், மேலும் மதுரை, கடலூர், திருவாரூர் உட்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று திடீரென, வேலூர், ஆம்பூர், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நேற்று திடீரென அதிக மழை பெய்தது. புதுச்சேரி நகரம் மட்டுமல்லாமல், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நேற்று மழை பெய்தது.