நீங்கள் இந்த தேர்தல் பணிகளில் ஈடுபடும் போது எல்லாவிதமான ஆயத்தங்களுடன், தற்காப்புடன் பணியாற்ற வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில், ‘உயிரே, உறவே, தமிழே வணக்கம். நான் நலமாக உள்ளேன். நான் நலம் பெற முக்கிய காரணம் ஒன்று மருத்துவம், மற்றோன்று உங்கள் அன்பும், உங்கள் நல விருப்பமும் தான் என நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். நான் படுத்துக்கிடந்த நேரத்திலும் கூட தொடர்ந்து உழைத்த, நம் மய்யத்தவருக்கு வாழ்த்துக்கள்.
நமது மய்யம் கிராம் சபையை பெரிதாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்த ஒரு சக்தி என்றால் மிகையாகாது. அது மட்டுமே நமது அடையாளமாக இல்லாமல், நடக்கவிருக்கும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் நாம் எதற்காக குரல் கொடுத்தோமோ, அதே களத்தில் இறங்கி வெற்றியும் காண வேண்டும் என்பது என்னுடைய ஆசை, என்னுடைய வாழ்த்துக்களும் கூட. உங்கள் நடுவில் இருக்கும் கருத்து வேறுபாடுகளையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு, வேலையை பாருங்கள்.
எப்படி இந்த கோவிட் காலத்தில் நமது தோழர்கள் உயிர்பயமின்றி பணிபுரிந்தார்களோ, அதே துணிச்சலுடன், ஆனால் மிகவும் முன்ஜாக்கிரதையுடன் செய்ய வேண்டும். உங்கள் நலன் எனக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் மிகவும் முக்கியம். நீங்கள் இந்த தேர்தல் பணிகளில் ஈடுபடும் போது எல்லாவிதமான ஆயத்தங்களுடன், தற்காப்புடன் பணியாற்ற வேண்டும். இந்த தேர்தலில் வெற்றியை ஈட்ட உழைப்பு மட்டுமல்ல, முன்ஜாக்கிரதையும், தற்காப்புக்கு மிகவும் அவசியம். அதை செய்து காட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன். வணக்கம், நாளைநாமதே.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…