கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணை 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு, இருவருக்கும் பெண் குழந்தை இருக்கின்றது. ராஜசேகர் மது அருந்திவிட்டு, மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த விவகாரம் போலீஸ் வரை சென்று சமாதானமாகினர். பின்னர் டிக்டாக்கில் அதிக ஈர்ப்பு கொண்ட ராஜசேகர், அதில் வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளார். நாளடைவில், பல பெண்களுடன் டிக்டாக் வீடியோ வெளியிட்ட தனது கணவரின் போக்கு முற்றிலும் மாறியதாக மனைவி சுகன்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய ராஜசேகர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கவிநயா என்ற பெண்ணை காணவில்லை என அவரது உறவினர்கள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். கவிநயாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி ராஜசேகருடன் பேசியது தெரியவந்தது. பின்பு கவிநயா மற்றும் ராஜசேகர் ஒன்றாக இணைந்து டிக்டாக்கில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த போலீசார் இருவரும் திருமணம் செய்துகொண்டு டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர் என சுகன்யாவிடம் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தனது கணவர் ராஜசேகர் ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், பல பெண்களை ஏமாற்றி சீரழித்து வருவதாகவும் சுகன்யா கடலூர் போலீசில் புகார் அளித்தார். அதில் குடும்பங்களை சீரழிக்கும் டிக்டாக் செயலியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கூறிய சுகன்யா, டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை போலீசார் ராஜசேகர் மற்றும் கவிநயாவைத் தேடி வந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்ததில் இருவரும் சுற்றித் திரி்ந்தபோது ரோந்து போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணையில், ராஜசேகர் தனக்கு திருமணமானதை மறைத்து விட்டதாகவும், இருவரும் காதலித்ததால் திருமணம் செய்ததாகவும் கவிநயா தெரிவித்துள்ளார். இதையடுத்து கவிநயாவின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்களுடன் அனுப்பி வைத்தனர். சுகன்யா அளித்த புகாரின் பேரில் ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர் பண்ருட்டி போலீசார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…