தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி – முதல்வர் அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஆட்சியர்கள் ஏற்படுத்தி தர வேண்டும் – முதல்வர் வலியுறுத்தல். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதயனிடையே, இன்று காலை முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அரசு அறிவிக்கும் அனைத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும். எந்தளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருகிறார்களோ, அந்த அளவிற்கு ஊரடங்கு தளர்வு செய்யப்படும் என்று கூறியிருந்தார். 

இதையடுத்து தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பழனிசாமி, அனைத்து மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழகம் தான் மருத்துவ சிகிச்சை அளிப்பதலில் இந்தியாவில் முதன்மையாக விளங்குகிறது என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஆட்சியர்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதனிடையே ஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago