TTF Vasan : விபத்தில் சிக்கிய யுடியூபர் டிடிஎப் வாசன்.! 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை.!

You Tuber TTF Vasan

கோவையை சேர்ந்த பிரபல யூடியூப் பிரபலம் டி.டி.எப்  வாசன், இணையத்தில் விலையுயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்வது, வெளியூர் பயணங்கள் மேற்கொள்வது, அதிவேக பைக் பயணம் உள்ளிட்ட பல்வேறு விடீயோக்களை பதிவிட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை (குறிப்பாக இளைஞர்கள் , சிறுவர்கள்) கவர்ந்துள்ளார்.

இவர் நேற்று சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, காஞ்சிபுரம் மாவட்டம் பாலுச்செட்டிசத்திரம் அருகே, தாமல் ஊர் பகுதி நெடுஞ்சாலையில் தனது பைக்கில் சாகசம் செய்ய முயற்சித்துள்ளார்.

அப்போது நிலை தடுமாறி அருகில் உள்ள சாலையோர பள்ளதாக்கில் விழுந்தார். இதில்  டி.டி.எப்  வாசனுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு கை எலும்பு முறிந்ததாக தெரிகிறது. உடனடியாக காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதன்பிறகு, சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் மீது பாலுச்செட்டிசத்திரம் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக வாகனத்தை இயக்கியது. சாலை விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டிடிஎப்.வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே டிடிஎப் வாசன் மீது அதிவேகமாக பைக் ஒட்டியது, இளைஞர்களை தவறான பாதைக்கு (அதிவேக பைக் ஓட்டுவதற்கு தூண்டுவது) உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன. அண்மையில் கூட சென்னை, மதுராந்தகம் அருகே டிடிஎப் வாசன் கார் ஓவரது இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்