சாத்தான்குளம் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட கமலஹாசன்.
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரும் காவல்துறையினரால், கடுமையான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும், அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் இந்நிலை நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்மிடையே விதைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இரத்தம் சொட்ட சொட்ட இருவரைத் தாக்கும் மூர்க்கத்தனம் கொலைபாதகக் குற்றம். அதை செய்தவர் எவராயிருந்தாலும் அந்த தவறுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கின்ற குரல்களுக்கு இடையில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை பார்க்கும் போது, அரசு இந்த விஷயத்தில் துளி கூட உண்மைத்தன்மையை கண்டறிய முயலவில்லை என்பது தெரிகிறது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நிவாரணமும் தேவை தான். ஆனால் அதை மட்டும் அவசரமாக அறிவித்து விட்டு இந்த கொலைகளை முதல்வர் கடந்து விடக் கூடாது என்றும், நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை. மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…
சென்னை : அதிமுக கூட்டணியில் விரைவில் பிரமாண்ட கட்சி இணைய இருப்பதாக இபிஎஸ் தெரிவித்தது பேசு பொருளாகி உள்ளது. அக்கட்சி…
திருவள்ளூர் : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள்…
கோவை : கடந்த 2019-ல் கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும்…