உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இல்லாமல் தூத்துக்குடி வரை பயணம் செய்தது தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் சென்னையிலுள்ள யானைக்கவுனில் நடத்தி வரும் காய்ச்சலுக்கான சிறப்பு முகாமை ஆய்வு செய்ததை பின்னர் அங்குள்ள மக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கியுள்ளார். அதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், கொரோனாவிற்கான விழிப்புணர்வை தன்னார்வலர்களை கொண்டு சென்னையில் குடிசை பகுதிகளில் உள்ள மக்களுக்கு நடத்தியது நல்ல பலனை அளித்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் தினமும் பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மக்களின் பாதுகாப்பிற்காக அயராது உழைக்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவ பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய, அமைச்சர் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கொரோனா தொற்று அதிகம் பரவும் இச்சமயத்தில் இ-பாஸ் இன்றி தூத்துக்குடிக்கு பயணம் செய்துள்ளார். அவர் இ-பாஸ் வைத்து பயணம் செய்தார் என்றால், அதை ஏன் டுவிட்டரில் பகிரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
கொரோனா தொற்று பரவுதலை கருத்தில் கொள்ளாமலும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் அவசியம் என்ற ஆணையை மதிக்காமல் இ-பாஸ் இன்றி பயணம் செய்த உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…