சென்னை மெரினா கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான நடைப்பாதையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்..!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுதிறனாளிகளுக்கான நடைப்பாதையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்.
சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்காக பல பிரத்தியேகமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினா கடற்கரையில் மரப்பாதையை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாற்றுத்திறனாளிகள் உடன் கடல் பரப்பு வரை சென்று அவர்கள் கடலில் கால் நினைப்பதை கண்டு மகிழ்ந்தனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் 15 மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியுடன் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது. இந்த சக்கர நாற்காலிகள் கடல் பரப்பிலும் தண்ணீரிலும் சுலபமாக செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை ஜனவரி 16 ஆம் தேதி வரை உபயோகத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025