நடிகர் விவேக் உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். இதைத்தொடர்ந்து, மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நடிகர் விவேக் முற்பகல் 11 மணிக்கு சுயநினைவின்றி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் விவேக் உடல்நிலையின் முன்னேற்றம் குறித்து 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதயத்தின் இடதுபுறம் இரத்தக்குழாயில் விவேக்கிற்கு 100% அடைப்பு இருந்தது.
நடிகர் விவேக் உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல எனவும், அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேக்கிற்கு ஏற்பட்டது இது முதல் மாரடைப்பு அவருக்கு ரத்தக் கொழுப்பு இருந்தது என மருத்துவமனை தரப்பில் விளக்கம் கொடுக்கபப்ட்டுள்ளது.
RT-PCR பரிசோதனை, சி.டி ஸ்கேனிலும் விவேக்கிற்கு கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…