முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி இவர்களுக்குத்தான் செலுத்தப்படும் -மத்திய அமைச்சர் அறிவிப்பு

இந்தியாவை பொருத்தவரை கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தடுப்பூசி தயாரிப்பு ஒத்திகை பணியை பார்வையிட்டார்.இதன் பின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,மத்திய ,மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இந்தியாவை பொருத்தவரை கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்தியாவில் குணமடைந்தர்வர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.தடுப்பூசி மருந்து தயாரிப்பிலும் இந்திய சிறப்பாக செயலாற்றி உள்ளது.அடுத்த சில நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது.
முதல் கட்டமாக மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.5 வயதிற்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வருகின்ற 17-ஆம் தேதி போடப்படும்.போலியோவை போல கொரோனாவையும் இந்தியாவில் இருந்து விரட்டி அடிப்போம்.கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025