#Breaking: “கலக்கப்போவது யாரு” மூலம் பிரபலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்!

Published by
Surya

கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி சென்னையில் காலமானார்.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, அதுஇதுஎது போன்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர், நடிகர் வடிவேல் பாலாஜி. மதுரையைச் சேர்ந்த 42 வயதாகும் பாலாஜி, நடிகர் வடிவேலுவை போலவே உடலமைப்பை கொண்டு நடித்து வந்தார்.

இதன்காரணமாக இவரை வடிவேல் பாலாஜி என கூறிவந்தார். அதுமட்டுமின்றி, பல திரைப்படங்களிழும் நடித்து வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், பொதியளவிலான பணவசதி இல்லாத காரணத்தினால், அங்கிருந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றபட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின், ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றபட்டுள்ளார்.

அங்கே கொரோனா நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு இன்று காலை மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், தற்பொழுது அவர் காலமானார்.

தனது திறமையால் பலரையும் சிரிக்கவைத்த வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு அவரின் ரசிகர்கள், அவருடன் பணியாற்றியவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

6 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

7 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

8 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

9 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

9 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

12 hours ago