பாஜக அரசின் ஏஜெண்டாகச் செயல்படுவதாக வைகோ கண்டனம்..!

MDMK Party Leader Vaiko

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாவை நியமிக்க அரசு முடிவு செய்து, இதற்காக  அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்என் ரவி சமீபத்தில் திருப்பி அனுப்பியிருந்தார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்க காரணங்கள் மற்றும் ஆளுநர் கேட்ட விளக்கங்களை கோப்பாக தயாரித்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது.

அதில், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாபுவின் பெயரை மீண்டும் பரிந்துரைத்தது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்து,  டி.என்.பி.எஸ்.சி தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி வேறு ஒருவரை தேர்வு செய்யுமாறும் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் இந்த செயலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி, சைலேந்திர பாபுவிற்கு அந்தத் தகுதி இல்லை என தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்திருப்பது, அவரது அதிகார எல்லையை மீறிய சர்வதிகார முடிவாகும்.

தமிழக அரசு செய்கின்ற பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல; பாஜக அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகின்ற தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்