தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளை இளைஞர்கள் படிக்க வள்ளலார் விரும்பினார்.! பிரதமர் உரை.!

PM Modi

இன்று வள்ளலாரின் 200வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வள்ளலாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை ராஜ்பவனில் (ஆளுநர் மாளிகை) வள்ளலாரின் சிலை திறக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி வள்ளலாரின் சிலையை திறந்து வைத்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவை காணொளி வாயிலாக கண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் வள்ளலாரின் பெருமைகளை குறிப்பிட்டு பல்வேறு கருத்துக்களை மக்களிடம் தெரிவித்தார்.  அதில், தற்போதைய நவீன கல்விதித்திட்டத்திற்கு வள்ளலாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இளைஞர்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற வள்ளலார் விரும்பினார். கடந்த 9 ஆண்டுகளில் கல்வி கட்டமைப்பு மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

3 தசாப்தங்களுக்கு பிறகு நமது நாடு தேசிய கல்வி கொள்கையை பெற்றுள்ளது. இளைஞர்கள் வட்டார மொழிகளில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை பயின்று வருகின்றனர்.  இதனால் அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

வெள்ளாளர் காலத்திற்கு முன்னதாக சிந்தித்து செயல்பட்டவர். சமூக சீர்திருந்ததை வலியுறுத்தியவர். ஒவ்வொரு அணுவிலும் கடவுளை கண்டவர். சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்தும் வள்ளலாரின் கொள்கைகள் எனது மனஉறுதியை மேலும் வலுவடைய செய்கிறது. மகளிருக்கு இடஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு வள்ளலார் உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக வாழ்த்தியிருப்பார்.

வள்ளலாரின் கொள்கைகள் அனைவருக்கும் புரியும்படி எளிமையானதாக உள்ளது. அன்பு , இரக்கம், நீதி ஆகிய அவரது போதனைகளை நாம் பரப்புவோம். தரமான கல்வி , குழந்தைகளுக்கு வழங்குவோம், வள்ளலாரின் 200வது பிறந்தநாளில் அவருக்கு நான் மீண்டும் ஒருமுறை மரியாதை செலுத்துகிறேன் என பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்