விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு..!

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர். கூட்டணி கட்சிகளுக்கு திமுக மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
திமுக கூட்டணியில் விசிகவுக்கு கடலூர் துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 நகராட்சி தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 3 நகராட்சி துணைத்தலைவர், 7 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில், கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு பா.தாமரைசெல்வன் போட்டியிடுவதாக விடுதலை சிறுத்தை கட்சி அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025