உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை! காவல் நிலையத்தின் முன் எரிக்கப்பட்ட கார்! நடந்தது என்ன?!

Published by
மணிகண்டன்

வேதாரண்யத்தில் நேற்று பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதையும் பரபரப்பாக்கியது. இதனால் அப்பகுத்தியில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் ஸ்தம்பித்தனர். இதற்குக் காரணம் என்னவென்று விசாரிக்கையில்,

வேதாரண்யம், ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது பாண்டியன் என்பவரின் கார் மோதி விபத்துக்குள்ளாகக்கியது. இதில், ராமச்சந்திரன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..அதேவேளையில் பாண்டியனின் கார் டிரைவர் அந்த காருடன் வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது, வந்த ஒரு பத்து பேர் காவல் நிலையத்தில் கல்வீசியும், அந்த காரை சேதப்படுத்தியும் அந்த காரை எரித்துவிட்டனர்.

தகவல் அறிந்து வந்த உடன் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முற்பட்ட போது. அவர்களை அக்குறிப்பிட்ட பிரிவினர் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால், கார் முழுவதும் ஏரிந்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து இன்னொரு தரப்பினர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் சிலையை உடைத்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. பேருந்துகள் சில நிறுத்தப்பட்டன. பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் மதுரையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சென்னையில் நடந்த போராட்டத்தில் போலீஸ்காரர்களுக்கும் விசிக கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில், ‘சிலையை உடைத்தவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படவேண்டும். தமிழகம் சாதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க அனைவரும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.’ என கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில் உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக புதிய அம்பேத்கர் சிலையை தமிழக அரசு சார்பில் பலத்த பாதுகாப்போடு பேருந்து நிலையத்தில் மீண்டும் நிறுவபட்டது. தற்போது பேருந்துகள் வேதாரண்யத்தில் வாழக்கம் போல ஓடுகின்றன. பதற்றமான நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Recent Posts

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

38 minutes ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

56 minutes ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

2 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

2 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

3 hours ago

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

4 hours ago