வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

Velankanni

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காணோர் குவிந்துள்ளனர். தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்து வைத்தார். பின்னர் கொடி ஊர்வலம் நடைபெற்று கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது.

இதையடுத்து, திருத்தலக் கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றுதல் போன்றவை தொடர்ந்து நடைபெறும். இன்று முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வரும் 2 -ம் தேதி மாலை சிலுவைபாதை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. 8 -ம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு, திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படும். மேலும், அன்றிரவு 8 மணிக்குப் பெரிய தேர்பவனி நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்