வழிகாட்டுதல் குழுவில் இடம்பெறாதது மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபி அருகே கொடிவேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், கர்நாடகம் மற்றும் மஹாராஷ்டிராவில் மூடப்பட்டுள்ள தமிழ்வழி பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், அதிமுக-வில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம்பெறாதது மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
கடந்த 7-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறுபவர்களை அறிவித்தனர்.
அதிமுக வழிகாட்டுதல் குழுவில் மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு..?
அதில், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றவர்களின் பெயரை முதல்வர் அறிவித்தார். அதில், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார்,சிவி சன்முகம், காமராஜ், ஜேசிடி பிரபாகரன், மனோஜ், பாண்டியன், மோகன், கோபல கிருஷ்ணன்மற்றும் சோழவந்தான் மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…