ஜூலை 20 வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.!
இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்று (ஜூலை 17) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஜூலை 18) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (ஜூலை 19) நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை,தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் வாய்ப்புள்ளது.
ஜூலை 20-ம் தேதி நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
கோவை மாணவி கூட்டு வன்கொடுமை – 7 பேருக்கு வாழ்நாள் சிறை.!
July 18, 2025
நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!
July 18, 2025
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!
July 18, 2025