TVK Vijay with Nanguneri Student Chinnadurai [file image]
சென்னை : த.வெ.க. கட்சி சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கொளரவிக்கும் விதமாக கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள திருவான்மியூரில் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா தொடங்கியுள்ளது.
இந்த விருது வழங்கும் விழாவில் முதலில் ‘தலைவா தலைவா’ பாடல் ல் ஒளிக்கப்படு தவெக தலைவரான விஜய் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டருக்குள் நுழைந்தார். மேலும், உள்ளே வந்தவுடன் முதலாவதாக நாங்குநேரியில் சாதி ஆதிக்கத்தால் கொடூரமாக பாதிக்கப்பட்ட சிறுவன் சின்னதுரை அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நாங்குநேரியில் கடந்த ஆண்டு நாங்குநேரியில் சாதி பாகுபாட்டால் தங்கையுடன் சேர்த்து 12ம் வகுப்பு மாணவரான சின்னத்துரையை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அப்போது உலுக்கி இருந்தது. அதன்பிறகு அந்த மாணவர் இந்த ஆண்டு 12 வகுப்பு பொது தேர்வில் 469 மதிப்பெண்கள் எடுத்து அபார தேர்ச்சி பெற்றிருந்தார்.
தற்போது அரங்கிற்குள்ள வந்தவுடன் முதல் ஆளாக அந்த நாங்குநேரி மாணவரின் அருகில் தவெக தலைவரான விஜய் அமர்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், அதை தொடர்ந்து அங்கு வருகை தந்த அனைத்து இடத்தில் இருந்த மாணவர்களின் மத்தியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…