DMDK Leader Vijayakanth Furnel [File Image]
உடல்நலக்குறைவால் உயிரிழந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிரமத்தில் உள்ள அவரது வீட்டில் முதலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது.
விஜயகாந்த் இறுதிச் சடங்கில் பொது மக்களுக்கு அனுமதியில்லை – போலீஸ் அறிவிப்பு.!
கேப்டன் விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கொண்டிருந்த காரணத்தால், இன்று அதிகாலை சென்னை தீவு திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது. அங்கும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
சென்னை தீவு திடலில் இருந்து ஈவெரா சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் அடக்கம் செய்ய கொண்டு வரப்பட உள்ளது. இறுதி சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்க குடும்பத்தினர் , முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வேண்டும் என தேமுதிக அலுவலகத்திற்குள் செல்ல பல தேமுதிக தொண்டர்கள் முற்பட்டனர். இதனை காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் , அங்கு சற்று பரபரப்பான சூழல் நிலவியது.
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…