தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிமுக – பாஜக இடையே இழுபறி இல்லை என்று பாஜக மாநில எல் முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிமுக – பாஜக இடையே இழுபறி இல்லை என்றும் இரண்டு நாளில் தொகுதி பங்கீடு இறுதியாகும் எனவும் கூறியுள்ளார். கூட்டணியில் தேமுதிக நிலை பற்றி அதிமுகத்தான் முடிவு எடுக்கும் என்றும் முக ஸ்டாலின் சொல்வதை போல் பாஜகவில் ரவுடிகள் பட்டியல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பேசிய எல் முருகன், 70 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் திமுக செய்யாத விஷயத்தை பாஜக இரண்டே வருடத்தில் செய்துள்ளது. ஏழை மக்களுக்கு இலவசமாக கேஸ் கனக்சன் கொடுத்தது பாஜக தான். இதுபோன்று பல சாதனைகள் பாஜக அரசு செய்துள்ளது. இந்த கொரோனா காலத்தில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நேற்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதன்பின் அமித்ஷாவுடன் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர். ஆனாலும், இன்னும் சுலபமான முடிவு எட்டப்படவில்லை, பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…