நேற்று நடந்த சட்டசபையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பேசினார்.அவர் பேசுகையில், மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, ஈழ தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார் .குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது . அதேபோன்று என்.ஆர்.சி சட்டத்தால், தமிழகத்தில் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட, அவர்களை பாதுகாக்கும் கொடுக்கும் முதல் குரலாக அதிமுக தான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில் ,ஆர்பி உதயகுமார் ஒன்றுக்கும் உதவாத குமார். அவருக்கு விஷயம் தெரியவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்த போது இந்த சட்ட திருத்தமே கொண்டு வரப்படவில்லை.
குடியுரிமை சட்டத்துக்கு நாங்கள் எதிர்ப்பு அல்ல. அந்த திருத்ததுக்கு மட்டும் தான் எதிர்ப்பு என்று கூறினார். ஜெயின், பௌத்தம், கிறிஸ்தவர், பார்சியரோடு சேர்த்து இஸ்லாமியர் மற்றும் இலங்கை தமிழரையும் சட்ட திருத்தத்தில் சேர்க்க வேண்டும் என்கிறோம் .அது அவருக்கு புரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…