நமக்கு சுருக்கி பேசி பழக்கம் இல்ல! திமுக-வை கருக்கி பேசிதான் பழக்கம் – நடிகை விந்தியா!

Vindhya

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மதுரை வலையங்குளத்தில் அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.  அதில் கலந்து கொண்டு பேசிய நடிகையும், அதிமுகவின் கழக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் விந்தியா  ” பொதுவாகவே நான் சிறிய மேடை 1 மைக் இருந்தாலே அரைமணி நேரம் பேசுவேன். ஆனால், இன்று கடல் மாதிரி கூட்டம் எவ்வளவு பெரிய மேடை இந்த பிரமாண்ட மேடையில் என்னை சுருக்கி பேச சொல்றாங்க.

எனக்கு எப்போதும் சுருக்கி பேசி பழக்கம் இல்லை திமுக-வை கருக்கி பேசித்தான் பழக்கம். எனவே எனக்கு சுருக்கி பேசியெல்லாம் வராது. முடிந்த அளவிற்கு முயற்சி செய்கிறேன். குள்ளநரி கூட்டத்திற்கு நடுவே, ஆட்சி செய்தவர் எடப்பாடியார். துரோகிகளுக்கு மத்தியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக இன்று எடப்பாடியார் இருக்க அவர் செய்த மக்கள் பணி தான் காரணம்.

கருணாநிதி, ஸ்டாலினை, ஸ்டாலின் உதயநிதியை தேர்வு செய்தது போல அல்லாமல்,  நம் தலைவர்கள் தொண்டர்களால் தேர்வானார்கள். நம் தலைவர்கள் ஒன்னும் விடியல் தருவதாக சொல்லி மக்கள் பணத்தை பறிக்க சட்டம் போட்டவர்கள் அல்ல . குழந்தைகளுக்கு சத்துணவு போட்டவர்கள்.

மக்களுக்காக மக்கள் திலகம் ஆரம்பித்த கட்சி தான் நம்மளுடைய அதிமுக கட்சி .மக்களால் நான் மக்களுக்காகவே நான் கூறியவர் அம்மா. அப்பன்களால் நம் தலைவர்கள் உருவாகவில்லை. கோடானகோடி தொண்டர்களால் உருவானவர்கள்.தமிழகத்தை ஆட்சி செய்ததிலேயே அதிகமுறை ஆண்ட கட்சி அதிமுக தான்.

எங்களுடைய இந்த பெரிய எழுச்சியை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும், எங்கள் சாதனைகளை மக்களுக்கு சொல்ல வேண்டும், நாங்கள் இருக்கிறோம். கண்டிப்பாக நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் ஆட்சிக்கு வந்த பிறகு நல்லாட்சி தருவோம் என மக்களுக்கு தெரியபடுத்துவதற்கு தான் இந்த பிரமாண்ட மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம்” என விந்தியா கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK STALIN - T N GOVT
CM MK Stalin
INDvsENG
Tiruchendur - Murugan Temple
vaibhav suryavanshi shubman gill
laura loomer donald trump