முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நாம் புயலை பாதுகாப்பாக கடந்து வருகிறோம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி வடக்கே கடற்கரை பகுதியில் 16 கி.மீ வேகத்தில் புயலின் மையப்பகுதி கடந்து வருவதால், கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயலின் மையப்பகுதி 25% கரையை கடந்த நிலையில், மீதம் எஞ்சியுள்ள பகுதிகள் படிப்படியாக கடந்து வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து தற்போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதல்வர் பழனிசாமி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நாம் புயலை பாதுகாப்பாக கடந்து வருகிறோம் என்றும் கடலூர் மாவட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிவர் புயல் கரையை கடந்துவிட்டது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் புயலின் பின் பகுதி கரையை கடக்கும் போதுதான் அதி தீவிர காற்றும் வீசும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அடுத்த 3 மணிநேரத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…