ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் உதவ வேண்டும் -ஸ்டாலின்

ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் உதவ வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை 21 நாட்களுக்குத்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.இதனால் வேலை செல்ல இல்லாமல் பல்வேறு மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மாவட்ட எம்எல்ஏ,எம்பி உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்பொழுது அவர் கூறுகையில்,சாதி,மதம் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உதவ வேண்டும். “ஒன்றிணைவோம் வா” என்ற தலைப்பில் அனைவரும் மக்கள் பணியாற்றுவோம் .கொரோனா தாக்கம் காரணமாக பட்டினியால் வாடும் ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025