அவர்களாகவே முறியடிக்கும் வரை, பாஜக கூட்டணியில் தான் தொடருவோம்; ஓ.பன்னீர் செல்வம்.!

பாஜக கூட்டணையில் தான் நீடிக்கிறோம் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வம் அங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது நாங்கள் இன்னும் பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறோம், அவர்கள் கூட்டணியை முறியடிக்கும் வரை கூட்டணியில் தொடர்வோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்த பன்னீர் செல்வம், இது போன்ற செயல்கள் இனி நடைபெறாமல் இருக்கவும், தகுந்த நடவடிக்கை எடுக்கவும் மாநில மற்றும் மத்திய அரசையும் கோரினார். தேனி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் விவகாரத்திலும் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என அவர் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற அதிமுக கூட்டத்திலும் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என கூறிய திண்டுக்கல் சீனிவாசன் குறித்து கேட்கப்பட்டபோது, அவர் எங்கிருந்தாலும் வாழ்க என கூறினார். அமைச்சர் மீதான ரெய்டு நடவடிக்கை குறித்து கேட்டபோது, அமைச்சர்கள் சட்டப்படி அதனை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.