மணிப்பூர் கலவரம்; கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு.!

மணிப்பூரில் கலவரத்தில் பெண்களை ஆடையின்றி அழைத்துச்செல்லப்பட்ட வீடியோவில் வரும், முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில் அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மணிப்பூர் கலவரத்தின் போது நிர்வாணமாக அழைத்து சென்று பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும், முக்கிய நபர் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெயர் ஹுய்ரெம் ஹெரோதாஸ் மெய்தி என்றும் 32 வயது எனவும் மணிப்பூர் அரசு அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.