எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
கொரோனா காரணமாக விமான போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கக்கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.மேலும் அந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதே கோரிக்கையுடன் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பேசுகையில்,வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க 146 விமானங்கள் தேவைப்படும் நிலையில் அதற்கான விளக்கத்தை மத்திய அரசு இதுவரை அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.மேலும் வெளிநாடுகளில் பசியாலும் வறுமையாலும் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய சமூக நல நிதியம் மூலமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இறுதியாக நீதிமன்றம் இது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து,வழக்கினை ஜூலை 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025