சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்தது என்ன ? நீதிபதிகள் விசாரணை

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்தது என்ன ? என்று நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இதற்கு நீதி வேண்டும் அரசியல் கட்சியினர்,சினிமா பிரபலங்கள்,விளையாட்டு பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.உயிரிழந்த தந்தை-மகனுக்கு மக்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களின் இரங்கலை #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக் மூலம் தெரிவித்தனர்.
மேலும் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு காவல்துறை தான் காரணம் என்ற குற்றச்சாட்டு அதிகம் எழுந்தது.இந்நிலையில் மாவட்ட குற்றவியல் நீதிபதி ஹேமா மற்றும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025