விதிகளை மீறி நடந்த திருணம்.! 15 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் ரூ.6,00,000 அபராதம்.!

திருமண விழாவில் கலந்து கொண்ட 15 பேருக்கு கொரோனா ஒருவர் பலி தம்பதியினர் குடும்பத்திற்கு ரூ .6,26,600 அபராதம் விதித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா மாவட்டத்தில் கடந்த ஜூன் 13 ம் தேதி ஒரு திருமண விழாவில் 50 க்கும் மேற்பட்டவர்களை அழைத்ததால் திருமண நடந்த தம்பதியினர் குடும்பத்திற்கு பில்வாரா மாவட்ட ஆட்சியர் ரூ .6,26,600 அபராதம் விதித்துள்ளார்.
இந்நிலையில் அந்த திருமண விழாவில் கலந்து கொண்ட 50 க்கும் மேற்பட்டவர்களில் 15 பேருக்கு கொரோனா உறுதியானது அதில் ஒரு நபர் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நோய் காரணமாக இறந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இதுவரை 16,944 கொரோனா பாதிப்பும் 391 பேர் இறந்ததாகவும் 13367 பேர் இந்த கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மதுரையில் மாநாடு.., தவெக தலைவர் விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு.!
July 14, 2025