மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்காம எங்கே பதுங்கி உள்ளார் இபிஎஸ்? – அமைச்சர் செந்தில் பாலாஜி

Published by
பால முருகன்

சென்னை : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மாநிலத்திற்கு கல்வி நிதி வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், அவர் இதனை தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் சட்ட விதிகள் தடையாக உள்ளன என்றும், தமிழ்நாடு அரசின் அரசியல் காரணங்களால் தான் இந்த கொள்கையை எதிர்க்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.

மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று மத்திய அரசு மிரட்டுவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

அவரைத்தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் குறித்து ஏன் பேசவில்லை என்கிற கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் ” மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார்.

‘தமிழ்நாட்டு மக்களை Blackmail செய்யும் நோக்கோடு திமிராக நடந்தால் தமிழ்நாட்டு மக்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்’ என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் தமிழ்நாட்டு உரிமைகளில் அக்கறையும் கொண்ட அனைவரும் ஒன்றிய பாஜக அரசின் தடித்தனத்தை எதிர்த்து வருகிறார்கள்.

வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்? சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டாமா?

இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்குக்குழி பழனிசாமிக்கு? இரு மொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதை கொள்கை முழக்கமாக முழங்கிய பேரறிஞர் பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் என கூறிக்கொண்டு ஒன்றிய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பழனிசாமி அவர்கள் தயவு செய்து அண்ணாவின் பெயரை விட்டுவிட வேண்டும். எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.” எனவும் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

8 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

22 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

4 hours ago