, ,

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எங்கே இருந்தீர்கள்..? தீபாவுக்கு கேள்வி.!

By

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா,  அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், போயஸ் தோட்ட வீட்டிற்கு இழப்பீட்டுத்தொகை நிர்ணய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்த்திருந்தார். அந்த வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்  அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எங்கு இருந்தீர்கள் ..? என ஜெ.தீபாவுக்கு கேள்வி நீதிபதி எழுப்பினார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்தும் உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தும், இந்த வழக்கு விசாரணையை 2 பேர் கொண்ட கிருபாகரன் அமர்வுக்கு மாற்ற நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

Dinasuvadu Media @2023