குஷ்பூவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார்? ட்விட்டருக்கு கடிதம் அனுப்பிய சென்னை சைபர் கிரைம் போலீஸ்…!

நடிகை குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார் என கேட்டு, சென்னை சைபர் கிரைம் போலீஸ், ட்விட்டருக்கு கடிதம் கடிதம் எழுதியுள்ளது.
பிரபல நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர் ஒருவர் முடக்கியுள்ளார். ட்விட்டர் பக்கத்தை முடக்கியது மட்டுமல்லாமல், அதில் உள்ள பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2020-ம் ஆண்டு ஏப்ரலிலும் இவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது தொடர்பாக குஷ்பூ, கடந்த 20-ம் தேதி, தனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதில் உள்ள பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தனது ட்விட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் டிஜிபியிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார் என கேட்டு, சென்னை சைபர் கிரைம் போலீஸ், ட்விட்டருக்கு கடிதம் எழுதியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025