அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? 3 மணிநேரத்திற்கு மேலாக நீடிக்கும் செயற்குழு கூட்டம்

சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ,முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது .ஆனால் அதிமுகவில் நீண்ட நாட்களாவே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதனிடையே தான் இன்று அதிமுக செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ,முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து இன்றே முடிவெடுக்க செயற்குழுவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025