எல்லாத் துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம் பிரதமர் மோடிக்கு மட்டுமே உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென அமளியில் ஈடுபடுவதும், இதனால் அவை ஒத்திவைக்கப்படுவதும் நடைபெற்று வந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று நேற்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்திருந்தது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பெகசிஸ் உரிமையாளரின் நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்புத் துறைக்கு எந்த வர்த்தக உடன்பாடும் கிடையாது என்று அந்தத் துறை அறிவித்திருக்கிறது.
அது உண்மை என்று வைத்துக் கொள்வோம். ஒரு துறை குற்றமற்றது என்றால், மற்ற துறைகளின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பி, ஏறத்தாழ 6-7 துறைகள் மீது சந்தேகம் உள்ளதே என்று கூறியுள்ளார். மேலும், எல்லாத் துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம் பிரதமர் மோடி அவர்களிடம் மட்டுமே உள்ளது. அவர் ஏன் பேச மறுக்கிறார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…