நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, நீட் தேர்வு விண்ணப்பத்தை இன்று மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம் என்றும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக அரசு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்தனர். இதனை தொடர்ந்து, இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா?”என மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது. எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு, மாண்புமிகு அம்மா அரசு செயல்படுத்திய “நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல்,தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அம்மா அரசு அளித்தது போல உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…