ஜனவரியில் கட்சி துவங்கவுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் அறிவிப்பு!

ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி துவங்கவுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளராக ரா.அர்ஜுனமூர்த்தி அவர்களையும், மேற்பார்வையாளராக திரு.தமிழருவி மணியன் அவர்களையும் நியமித்துள்ளார்.
ரஜினிகாந்த் அவர்கள் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாக இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு கொடுத்திருந்தார். இதனால் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவுடன் நேர்மையான நாணயமான ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம் என ரஜினி கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜனவரியில் தான் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரா.அர்ஜுனமூர்த்தி அவர்களையும், திரு.தமிழருவி மணியன் அவர்களையும் நியமித்துள்ளதாக தற்பொழுது ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
— Rajinikanth (@rajinikanth) December 3, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025