பெண் ஊழியருக்கு காதல் வலை வீசிய சி.எம்.டி.எ அதிகாரி – விசாகா கமிட்டி விசாரணை !

சென்னையில் எழும்பூரில் செயல்பட்டு வரும் சி.எம்.டி எ அலுவலகத்தில் பணியாற்றி வரும் உயர் அதிகாரி ஒருவர் , தனக்கு கீழ் பணி புரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவருக்கு வாட்சப் மூலம் காதல் தொல்லை குடுத்து வந்துள்ளார். ஆரம்பத்தில் காலைவணக்கம், இரவு வணக்கம் என்று தொடங்கிய மெசேஜ் ஒரு கட்டத்தில் எல்லையை தாண்டி உள்ளது. இதற்க்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருந்தும் அந்த ஊழியர் தொல்லை தாங்காமல் பணிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தனக்கு வேண்டிய ஒருவரிடம், உயர் அதிகாரி அனுப்பிய மெசேஜ் களை காட்டியுள்ளார்.
உடனே, அந்த நபர் சி.எம்.டி.எ அலுவலகம் சென்று அந்த உயர் அதிகாரியிடம் முறையிட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பிரச்சனையானது அலுவலகத்தின் விசாக கமிட்டியின் விசாரணைக்கு சென்றுள்ளது. இந்நிலையில், பெண் ஊழியருக்கு தவறாக மெசேஜ் அனுப்பியது போன்று பல பெண்களிடம் இவ்வாறு தவறாக அந்த அதிகாரி செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், பெண் ஊழியருக்கு அனுப்பிய மெசேஜ் அலுவலகத்தில் அனைவரது கைபேசியிலும் பரவியுள்ளது. உயர் அதிகாரிக்கு வழங்க இருந்த பதவி உயர்வும் ரத்து செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தி வருகிறது சி.எம்.டி.எ நிர்வாகம்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025