8 மாதிரி இருந்த பெண்கள் இடுப்பு இன்றைக்கு பாரல் மாதிரி மாறிப்போச்சி…! – திண்டுக்கல் லியோனி

Published by
லீனா

8 மாதிரி இருந்த பெண்கள் இடுப்பு, இன்றைக்கு பாரல் மாதிரி பெருத்து போய் கிடக்கிறது.

திண்டுக்கல் லியோனி கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஊழல் எஸ்.பி.வேலுமணி அராஜகத்துக்கு கார்த்திக் சிவசெனபதி சாவுமணி அடிக்கப் போகிறார். இவர் என்ன செய்தார் என்று நீங்கள் எல்லாம் பார்த்து இருப்பீர்கள்.

மாடுகளில் பல வகையுண்டு. பண்ணையில் இருக்கிற மாடுகளை பார்த்திருக்கிறீர்களா? ஃபாரின் மாடு அது மெஷின் வச்சா தான் பால் கறக்கும். அந்த பாலை குடிச்சு குடிச்சு தான் நம்ம பெண்கள் பலூன் மாதிரி ஊதிப் போய் விட்டார்கள். ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருந்தது. பிள்ளையை தூக்கி வைத்தால், இடுப்பில் உட்கார்ந்து கொள்ளும்.

பாரின் மாடு ஒரு மணி நேரத்தில் 40 லிட்டர் பால் கறக்கும். ஆனால் அதை குடித்து வந்ததால் தான் இன்று பெருசா ஊதி போகவேண்டியதுதான். 8 மாதிரி இருந்த பெண்கள் இடுப்பு, இன்றைக்கு பாரல் மாதிரி பெருத்து போய் கிடக்கிறது. பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்தால் வழுகி போகிறது என்று விமர்சித்தார். மேலும் அவர் பேசுகையில், தாய்ப்பாலுக்கு அடுத்து சுத்தமான பால், நாட்டுமாட்டு பால் தான்.  அந்த நாட்டு மாடுகளை காப்பாற்ற மாபெரும் இயக்கம் நடத்தியவர் தான் கார்த்திக் சிவ சேனாதிபதி என்று பேசியுள்ளார். திண்டுக்கல் லியோனின் இந்த பேச்சிற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

37 minutes ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

55 minutes ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

2 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

2 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

3 hours ago

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

4 hours ago