உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்… இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பதில் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

AR Rahman - Tamilnadu CM MK Stalin

திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் , தமிழை தாண்டி பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். இவர் திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமல்லாமல் , இசை கச்சேரிகளையும் அவ்வப்போது நடத்துவர்.

நேற்று சென்னையில் மிகப்பெரிய இசை கச்சேரி நடத்த திட்டமிட்டு இருந்தார். சென்னை இ.சி.ஆர் சாலை பகுதியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் கனமழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக , இந்த நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்படுவதாகவும், விரைவில், இந்த இசை நிகழ்ச்சியின் மாற்று தேதி அறிவிக்கப்படும் என அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து ஒரு ரசிகர் தான் மதுரையில் இருந்து இதற்காக வந்ததை குறிப்பிட்டு சோகமாக X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமான், எங்கள் அரசாங்கத்தின் உதவியுடன் சர்வதேச மெகா கலைநிகழ்ச்சிகள் நடாத்தும்படியான அடுத்த கட்ட உள்கட்டமைப்பை சென்னையில் உருவாக்குவோம் என நம்பிக்கை பதிவை இட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பதில் தகவலை பதிவிட்டுள்ளார். அதில், உங்கள் நீண்ட நாள் ஆசை சென்னையில் விரைவில் நிறைவேற்றபடும். ECR இல் நிறுவப்படும் கலைஞர் கலை வளாகம் பெரிய வடிவ கச்சேரிகள், நிகழ்ச்சிகள், நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்தக்கூடிய உலகத்தரம் வாய்ந்த வசதியாக இருக்கும்.

இந்த வளாகம் இயற்கையை ரசிக்கும்படியாகவும், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், பார்க்கிங் என நகரத்தின் புதிய கலாச்சார சின்னமாக இந்த வளாகம் இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்