விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் இளைஞர் உயிரிழப்பு? காவல்நிலைய மரணமாக வழக்கு பதிவு!
புதுக்கோட்டையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் அதே போல ரோந்து பணியில் ஈடுபடுகையில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டதன் பெயரில் 13 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதில் ஒரு இளைஞர் தான் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் விக்னேஸ்வரன். அதனைத் தொடர்ந்து கைது செய்த இளைஞர்களை காவல் நிலையத்தில் வைத்திருந்த போது விக்னேஷுக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டதால், அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விக்னேஸ்வரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரைத் தொடர்ந்து மேலும் கைது செய்யப்பட்ட இளைஞர்களில் இருவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்களும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது இந்த உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவரது உறவினர்கள் கூறுகையில், ‘போலீசார விசாரணைக்கு அழைத்து செல்லும் போதுதான் அவர் உயிரிழந்து உள்ளார்’ என குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால், காவல்துறை உயர் அதிகாரிகள், அந்த காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தி இருக்கின்றனர். அந்த விசாரணையில் விக்னேஷுக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை போன்ற பிரச்சினை இருந்ததாகவும், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் தான் விக்னேஷ் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதனால், காவல் நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதால், இதை காவல் நிலையம் மரணமாக வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபரதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025