பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. ஒரு வயது குழந்தை உட்பட 27 பேர் பரிதாப பலி.!

மெக்சிகோவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததான் காரணமாக ஒரு வயது குழந்தை உட்பட 27 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவிலில் இருந்து யோசோண்டுவாவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென்று எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து விலகி அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து பெரிய விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்து 27 பேர் உயிரிழந்ததாகவும் 17 பேர் படுகாயம் அடைந்ததாகவும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. முதலில் 25 பேர் உயிரிழந்தனர் என கணக்கிடப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தது பின்னர் மீட்பு பணியின் போது தெரியவந்தது. மேலும் இதில் ஒரு வயது குழந்தையும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 13 ஆண்கள் 13 பெண்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தை அறிந்தவுடன் மீட்பு பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், இந்த பெரிய விபத்து காரணமாக யோசோண்டுவா அருகில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவ ஊழியர்கள் மருத்துவ உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025