elephant lion [File Image]
அனிமல் வீடியோ : சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விலங்குகள் தொடர்பாக நாம் வேடிக்கையாக பார்க்க கூடிய வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கமானது. ஒரு சில வீடியோக்கள் வேடிக்கையாக இருந்தாலும், பரிதாபமாகவும் இருக்கும். அப்படி தான் தற்போது அடர்ந்த காட்டிற்குள் சிங்கம் ஒன்றும் யானை ஒன்றும் சண்டைபோட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
வீடியோவில் ” ஒரு யானையை சிங்கம் ஒன்று தும்பிக்கையை பிடித்துக்கொண்டு தாக்க முயற்சி செய்கிறது. ஆனால், யானையின் தோல் மிகவும் கடினமாக இருப்பதால் சிங்கத்தால் அதனை தாக்க முடியவில்லை. இருப்பினும், விடாமல் கடுமையாக தனது கூர்மையான பற்களை வைத்து கீழே விழாமல் யானையை சிங்கம் தாக்க முயற்சி செய்து கொண்டே இருந்தது.
யானையும் போராடி சிங்கத்தை தக்க முயற்சி செய்தது ஆனால், சிறுது நேரம் முடியவில்லை. பிறகு தனது முழு பலத்தை காட்டிய யானை தந்ததில் தொங்கி கொண்டு இருந்த சிங்கத்தை தூக்கி வீசியது. கீழே விழுந்த பெண் சிங்கம் யானை மீது இருக்கும் பயத்தில் தெறித்து ஓடியது. இந்த சண்டையில் யானைக்கு சிறிய காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் யானை பலம் என்றால் சும்மாவா? எனவும், மேலும் சிலர் யானையுடன் போராடிய சிங்கத்தின் தைரியத்துக்கு பாராட்டுக்கள் எனவும் தெரிவித்து வருகிறார்கள்.
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…