இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் மரணம்.!
இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் ஈரானின் புரட்சிகர படையின் தலைமை தளபதி ஹொசைன் சலாமி பலியாகி விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் : ஈரான் மீது, இஸ்ரேல் ராணுவம் இன்று அதிகாலை முதல் பெரிய அளவிலான தாக்குதல்களை தொடங்கியுள்ளது. ஈரான் அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்க தனது விமானப்படை தெஹ்ரானில் குண்டுவீசியதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள் மீது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்திருக்கிறது. இதனால் ஈரானில் பல இடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்படுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தற்போதைய தகவலின்படி, ஈரானிய ராணுவ படைகளின் தலைமை தளபதி முகமது பகேரி மற்றும் ஈரானிய புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி உயிரிழந்தனர். மேலும், ஈரானிய படைகளை ஒருங்கிணைக்கும் தளபதி கோலமாலி ரஷித், 2 உயர்மட்ட ஈரானிய அணு விஞ்ஞானிகளும் பலியாகினர். அதுமட்டுமின்றி, ஈரான் அணு விஞ்ஞானிகள் அப்பாஸி-தவானி, முகமது மெக்தி தெக்ரான்சி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025