திடீரென தீப்பிடித்த சரக்கு கப்பல் – இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழப்பு!

Ship Fire - Dutch Coast

ஜெர்மனியில் இருந்து எகிப்துக்கு சுமார் 3000 சொகுசு கார்களை ஏற்றி வந்துகொண்டிருந்த சரக்கு கப்பல், டட்ச் கடற்பகுதி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், பலர் படகில் இருந்து குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதில், கப்பல் ஊழியரான இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு மற்றும் 20 பேர் காயமடைந்தனர். மேலும், அந்த கப்பலில் 20 இந்தியர்கள் பணியாற்றுவதாக தகவல் தெரிவிக்கின்றனறர்.

தீ பரவி சுமார் 16 மணி நேரத்திற்குப் பிறகும் சரக்குக் கப்பலில் தீயை அணைக்க நெதர்லாந்து தீயணைப்பு வீரர்கள் போராடியதாக டச்சு கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்