ரஷ்ய தலைநகர் கட்டடங்களை தாக்கிய பறக்கும் ட்ரோன்கள்.!

ரஷ்ய தலைநகர் கட்டடங்கள் மீது ட்ரான் தாக்குதல் நடைபெற்றுள்ளன. இதில் சிறிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் ஆக போகிறது. இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்த தாக்குதல்கள் தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்று தான் வருகிறது.
தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கட்டடங்கள் மீது ட்ரான் மூலம் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் குறித்தும் மாஸ்க்கோ மேயர் கூறுகையில், இந்த தாக்குதல் மூலம் சிறிய சேதம் ஏற்பட்டது. என்றும் கடுமையான தாக்குதல்கள் எதுவும் இல்லை என எனவும் அவசர சேவைகள் அனைத்தும் சம்பவ இடத்தில் இருக்கிறது என்றும் மேயர் தெரிவித்தார்.
மேலும், இந்த தாக்குதல்களை கொண்டு நகரின் மாஸ்கோ நகரின் தெற்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் வசிப்பவர்கள் சிலர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலை உக்ரைன் தான் நடத்தியது என கூறப்படுகிறது. இருந்தும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.