தலைதூக்கும் துப்பாக்கி சூடு சம்பவம் – 28 பேரின் நிலைமை பரிதாபம்.!

அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துக் காணப்படுகிறது. அமெரிக்காவின் பால்டிமோர் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் நடந்த நிகழ்ச்சியின்போது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வார விமுறையான ஞாயிற்று கிழமை அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பால்டிமோர் நகரில் வன்முறை குற்றங்களை குறைப்பதற்கான தங்கள் முயற்சிகளை இந்த வாரம் பெடரல் வழக்கறிஞர்கள் எடுத்துரைத்ததால் வன்முறை ஏற்பட்டது. இந்த ஆண்டு இதுவரை கிட்டத்தட்ட 130 கொலைகள் மற்றும் 300 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025