இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஏற்கனவே நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

israel iran war Abbas Araghchi

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 13, 2025 முதல் இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல்களை தொடங்கியது. இதற்கு பதிலடியாக, ஈரான் தெல் அவிவ் மற்றும் ஹைஃபா உள்ளிட்ட இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

இந்த மோதலில், ஈரானில் 224 பேர் உயிரிழந்ததாகவும், இஸ்ரேலில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா இதுவரை நேரடி இராணுவ தலையீட்டை தவிர்த்து வருகிறது, ஆனால் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் தளவாட ஆதரவு வழங்குவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே அமெரிக்கா இந்த போரில் நேரடியாகவே இறங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தீயாக பரவியது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூன் 18-ஆம் தேதி அன்று வெள்ளை மாளிகையில் நடந்த தேசிய பாதுகாப்பு கூட்டத்தில், ஈரானின் ஃபோர்டோ அணு ஆயுத மையத்தை 30,000 பவுண்டு ‘பங்கர்-பஸ்டர்’ குண்டுகளை பயன்படுத்தி தாக்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது டிரம்ப், “நான் இதை செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம். யாருக்கும் என் முடிவு தெரியாது,” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அது மட்டுமின்றி, ரஷ்யா அதிபர் புடின் போரை நிறுத்தவேண்டும் என்பதை விரும்பு சமீபத்தில் ” இஸ்ரேல் – ஈரான் இடையே நடக்கும் போரை மத்தியஸ்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம்” என்பது போல தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, டிரம்ப் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தி மத்தியஸ்தம் செய்யும் பொறுப்பை நாங்கள் விரும்பவில்லை” எனவும் பேசியிருந்தார். எனவே, அவர் போர் நிறுத்த முடிவில் இல்லை என்பது தெரியவந்தது.

இந்த பரபரப்பான சூழலில், அமெரிக்கா இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டால் ‘அனைவருக்கும் மிகவும் ஆபத்தானது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஏற்கனவே நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இப்படியான சூழலில் அமெரிக்காவும் இந்த போரில் ஈடுபட்டது என்றால் நிச்சயமாக அது அனைவர்க்கும் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். அவர்களும் இதில் தலையிட்டால் முழு போருக்கு ஒரு முக்கிய காரணமாக மாறிவிடும்.

அவரைத்தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் எஸ்மைல் பாகேய் இது குறித்து பேசும்போது “ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சவில்லை என்று கூறி, ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், இஸ்ரேலின் தாக்குதல்கள் அணு ஆயுத பேச்சுவார்த்தைகளை தடை செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டவை என்று அராக்சி குற்றம்சாட்டினார். மேலும், ஏற்கனவே போர் காரணமாக பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில், அராக்சியின் எச்சரிக்கை, அமெரிக்காவின் தலையீடு இருந்தால் என்ன ஆகும் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்