ஒடிசா ரயில் விபத்து… ரஷ்யா, பாகிஸ்தான் தலைவர்கள் இரங்கல்.!

Russia Pak Condole

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவில் நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே வேதனைக்குள்ளாக்கியுள்ளது. ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் 261 பேர் பலி மற்றும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் நடந்த இந்த ரயில் விபத்து குறித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் ரயில் மோதிய விபத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயரத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் விரைவில் குணமடைய விரும்புகிறோம் என கூறியுள்ளார்.

இந்த கோர விபத்து குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ஆழ்ந்த இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். அவர் தனது டிவீட்டில் இந்தியாவில் நடந்த ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்